Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/01/2019

இன்றைய நாள் எப்படி 05/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 28ம் தேதி,
5.1.19 சனிக்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி நாள் முழுவதும், மூலம் நட்சத்திரம் மாலை 4:15 மணி வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : அனுமன் ஜெயந்தி, ஆஞ்சநேயர், சனீஸ்வரர் வழிபாடு, அமாவாசை விரதம், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல்.

மேஷம் : பணி தாமதம் ஆவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊகக்ம் தரும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை உண்டு. புதிய இனங்களில் செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

ரிஷபம் : அவசியமற்ற வகையில் கிடைக்கின்ற உதவியை தவிர்ப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்பச்செலவு கூடும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மிதுனம் : வெகுநாள் திட்டமிட்ட பணி ஒன்று எளிதாக நிறைவேறும். மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

கடகம் : எதிராக செயல்பட்டவர்கள் விலகுகிற நன்னிலை உருவாகும். புதிய திட்டங்களை சிறப்பாக வடிவமைப்பீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.

சிம்மம் : கவனக்குறைவால் நன்மை பெறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரம் சீராக இயங்க குறைகளை சரி செய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும்படி அதிக செலவு செய்ய வேண்டாம். உடல் நலத்திற்கு மருத்துவசிகிச்சை தேவைப்படலாம்.

கன்னி : பகைமை குணத்துடன் பேசுபவரிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. நண்பரின் நல்ல ஆலோசனை சில நன்மை தரும். தொழில் வளர்ச்சி சீராக அக்கறையுடன் பணிபுரிவீர்கள். அளவான பணவரவுகிடைக்கும். அறிமுகமில்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.

துலாம் : செயல்களில் கூடுதல் நேர்த்தி உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம் : குடும்ப சிரமம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். தொழிலில் இலக்கை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பணிகளில் மனதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

தனுசு : நற்குணங்களால் முக்கியஸ்தர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.

மகரம் : நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தம் தரும். பொறுமை குணத்தால் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும்.

கும்பம் : உத்வேக மனமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மீனம் : உயர்வு தாழ்வு கருதாமல் எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: