Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 04/12/2018

இன்றைய நாள் எப்படி 04/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல் அவ்வல் 25ம் தேதி,
4.12.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை துவாதசி திதி மதியம் 1:16 வரை;
அதன்பின் திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:24 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த—மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், துர்க்கை வழிபாடு.

மேஷம் : முக்கியமான செயலை மதிநுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வளர அனுகூலகாரணி பலம் பெறும். உபரி வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும்.

ரிஷபம் : இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கியமான செயல் ஒன்று எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம் : உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் அணுகுவார். இயன்ற அளவில் உதவிபுரிவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர சில மாற்றம் செய்வது அவசியம். பணவரவைவிட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.

கடகம் : மாறுபட்ட அணுகுமுறையால் சிலரது அதிருப்திக்கு உள்ளாக நேரிடலாம். பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம் : உங்கள் பேச்சு நண்பரின் மனதில் உற்சாகத்தை உருவாக்கும். முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.

கன்னி : அவப்பெயர் வாங்குகிற நிலை ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி உதவும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு நம்பிக்கைத் தரும்.

துலாம் : திட்டமிட்ட செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை திருப்திகரமாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும்.

விருச்சிகம் : சிலர் மற்றவரை விமர்சிக்க உங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவர். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

தனுசு : மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். அறிவுத் திறமையால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் கடின உழைப்பால் வளர்ச்சி பெறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மகரம் : மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். ஆதாய பணவரவில்வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். உறவினர்களுடன் சந்தோஷ சந்திப்பு ஏற்படும்.

கும்பம் : நண்பரிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். நடைமுறைச் செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

மீனம் : நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆடம்பர பணச்செலவு தவிர்க்கவும். வீடு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்!

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம். மேஷம் உங்களுடைய சிந்தனையின் போக்கில் மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ...

%d bloggers like this: