Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 04/12/2017

இன்றைய நாள் எப்படி 04/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல்அவ்வல் 14ம் தேதி, 4.12.17 திங்க ட்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 8:06 வரை; அதன் பின் துவிதியை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 8:26 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 -7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30- 9:00 மணி
* எமகண்டம்: காலை 10:30- 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி

* சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : அனுஷம்.
* பொது :கார்த்திகை 3ம் சோமவாரம்.

மேஷம்: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவை. பணவரவில் தாமதம் இருக்கும். சேமிப்பு முக்கிய செலவுக்கு பயன்படும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

ரிஷபம்: உங்கள் நலன் விரும்புவரைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் பூர்த்தியாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : செயல்களில் சீர்திருத்தம் அவசியம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பினால் சராசரி நிலையை அடைவீர்கள். நிலுவை பணம் வசூலிப்பதில் நிதானம் வேண்டும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம்: நோ்மையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து விளங்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இருந்த தொல்லை விலகும்.

கடகம் : நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். மனதில் உற்சாகத்துடன் செயல் படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். சமூக அந்தஸ்து உயரும்.

கன்னி: யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணிகளை திறம்பட செய்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். பணச்சிக்கனம் சிரமம் தவிர்க்கும். சிகிச்சை எடுக்க வேண்டி வரும்.

துலாம்: பிடிவாத குணத்தால் நன்மை கிடைக்க தாமதமாகும். தொழில், வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு அவசியம். குறைந்த லாபம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர்.

விருச்சிகம் : திட்டங்களைச் செயல்படுத்த அனுபவ அறிவு கைகொடுக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமித வளர்ச்சி ஏற்படும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்கள் பாராட்டு பெறுவர்

தனுசு : மனதில் சந்தோஷம் உருவாகும். பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. தொழில் வியாபார வளர்ச்சியால் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

மகரம் : பணிகளில் மேம்போக்காக இருக்கக்கூடாது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். செலவு அதிகரிக்கும். சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கும்பம்: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பேசவும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணிகளை உடனே நிறைவேற்றுவது நல்லது. சுமாரான லாபம் கிடைக்கும். மனசஞ்சலத்துக்கு தீர்வு காண வழிபாடு செய்யுங்கள்.

மீனம் : இனிய எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: