Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/11/2019

இன்றைய நாள் எப்படி 04/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 18ம் தேதி, ரபியுல் அவ்வல் 6ம் தேதி,
4.11.19 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 6:31 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : திருவோண விரதம், பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: பழகுபவர்களிடம் நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை அதிகரிக்கும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். உறவினர் நன்கு மதித்து சொந்தம் பாராட்டுவர்.

ரிஷபம் : வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய முயற்சி துவங்குவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மிதுனம்: முன் யோசனையுடன் நடந்து கொள்வது நற்பலன் தரும். தொழில், வியாபாரத்தில் பெறுகிற அனுகூலம் ஓரளவு குறையலாம். உறவினர் வகையில் பண செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் நல்லது. தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

கடகம்: உங்களை தவறாக விமர்சித்தவர் தன் குறை உணர்ந்து நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும்.

சிம்மம்: செயல்களில் சமயோசிதமாக நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பலன் முழு அளவில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி: உங்கள் மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

துலாம்: பணிகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் தாமத நிலையில் இயங்கும். அளவான பண வரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

விருச்சிகம்: மங்கல தன்மையுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். இடையூறு விலகி பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். அரசு உதவி பெற அனுகூலம் உருவாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

தனுசு: பிறர் உதவியை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபார வளர்ச்சி சீராகும். மிதமான அளவில் பண வரவு இருக்கும். அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவும்.

மகரம்: எதிர் வரும் சிரம சூழ்நிலையை உரிய முயற்சியினால் சரி செய்வீர்கள். நண்பர் இயன்ற அளவில் உதவுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அபிவிருத்தியாகும். பண வரவு திருப்தி கரமான அளவில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

கும்பம்: உங்களின் நடவடிக்கையில் செயல் திறன் மிகுந்திருக்கும். வாய்ப்புகளை கவனமுடன் பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். பண வரவு திருப்திகரமாகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மீனம்: சிலரது பரிகாச பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். திட்டம் நிறைவேறும் முன் முடிவை பற்றி கவலை வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை இருக்கும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: