Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 04/11/2018

இன்றைய நாள் எப்படி 04/11/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 18ம் தேதி, ஸபர் 25ம் தேதி,
4.11.18 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, துவாதசி திதி இரவு 1:24 வரை;
அதன்பின் திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:04 வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : முகூர்த்தநாள், சூரியன் வழிபாடு.

மேஷம் : நலம் விரும்புவரின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.தாராள அளவில் பணவரவு பெறுவீர்கள்.மனைவி விரும்பிக் கேட்ட வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

ரிஷபம் : பொறாமை குணமுள்ளவர்கள் குறை சொல்வர். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.குடும்பச் செலவு அதிகரிக்கும்.சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. பெண்கள் உடல்நலம் பேண வேண்டும்.

மிதுனம் : மனதில் ஒருமுகத் தன்மையுடன் பணிபுரிவது அவசியம்.எவரிடமும் வீண் விவாதம் கூடாது.தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவை.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும்.

கடகம்: மனதில் அன்பும் கருணைத் தன்மையும் அதிகரிக்கும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பான முறையில் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு.இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

சிம்மம் : உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவர்.தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்ள வேண்டும்.

கன்னி: இஷ்ட தெய்வ அனுகிரகம் புதிய நன்மைகளை பெற்றுத் தரும்.தொழிலில் உருவான தாமதம் விலகும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் ஆடை, ஆபாரணம் வாங்கி குவிப்பர்.

துலாம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம்.தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும், வாகனத்தில் நிதானம் தேவை.

விருச்சிகம்: வாழ்வில் முன்னேற புதிய வழி பிறக்கும்.பிறர் வியக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவரவு கிடைக்கும்.பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு: இனிய பேச்சு நண்பரின் மனக் கஷ்டம் தீர உதவும்.பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பெண்கள் புத்தாடை ஆபரணம் வாங்குவர்.

மகரம் : பணிகள் நிறைவேற கூடுதல் கவனமும் உழைப்பும் அவசியம்.தொழிலில் உருவாகிற இடையூறை நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள்.குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும்.அரசியல்வாதிகள் சமரச பேச்சில் நிதானம் பின்பற்றவும்.

கும்பம் : வீணாக பேசுபவரிடம் விலகுவது நல்லது.தொழிலில் உருவாகிற இடையூறு சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சிறு அளவில் கடன் வரும்.மருத்துவ சிகிச்சை உடல் நலம் பாதுகாக்க உதவும்.

மீனம் : நண்பரிடம் ஆன்மிக கருத்துக்களை பேசுவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும்.பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு வெகுமதி பெறுவீர்கள்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 15/12/2018

இன்று! விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 15.12.18, சனிக்கிழமை, வளர்பிறை அஷ்டமி ...

%d bloggers like this: