Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/10/2019

இன்றைய நாள் எப்படி 04/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 17ம் தேதி, ஸபர் 4ம் தேதி,
4.10.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி பகல் 3:22 வரை;
அதன் பின் சப்தமி திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:21 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3.00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : சஷ்டி விரதம் முருகன், மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : மனதில் இனம் புரியாத சங்கடம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் அன்பு, பாசத்துடன் உதவுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு கூடும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம் : உங்களிடம் சிலர் அனுகூலம் பெற முயற்சி செய்வர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மிதுனம் : வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். அக்கறையுடன் பணி புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவில் குடும்ப தேவை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கடகம்: மனதில் இனம் புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரி செய்ய நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேறுவதில் கூடுதல் உழைப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை பணச்செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

கன்னி : உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவரின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்: நேர்மை செயல்களால் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடலாம். சத்து நிறைந்த உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்: முக்கியமான செயல் நிறைவேற அனுகூல சூழ்நிலை அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

தனுசு: உங்களின் கஷ்ட சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதம் ஆகலாம்.

மகரம் : உங்களின் திறமையை வளர்த்து கொள்வீர்கள். செயல்களில் பெறுகின்ற நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசு பொருள் தருவார்.

கும்பம் : மனதில் புதுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு விலகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மீனம் : எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை தரும். பணியாளர் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: