Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/09/2019

இன்றைய நாள் எப்படி 04/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 18ம் தேதி, மொகரம் 4ம் தேதி,
4.9.19 புதன்கிழமை வளர்பிறை, சஷ்டி திதி நாளை அதிகாலை 4:12 வரை
அதன் பின் சப்தமி திதி, சுவாதி நட்சத்திரம் காலை 11:34 வரை
அதன் பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 — 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00- – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30- – 9:00 மணி
குளிகை : காலை 10:30- – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : சஷ்டி விரதம், முருகன் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம் : இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இயற்கை சூழ்நிலைகளுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் அதிகரிக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம் : மனதில் இருந்த கவலை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி வளரும்.

மிதுனம் : சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவர். முன்யோசனையுடன் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கடகம் : செயல் நிறைவேற தாமதம் ஆகலாம். சிறிய பணி கூட அதிக சுமை போல தோன்றும். தொழில், வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம் : செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும்.

கன்னி : வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். எண்ணத்திலும், பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும்.

துலாம் : மனதில் கருணை தன்மை அதிகரிக்கும். நற்செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம் : மாறுபட்ட சூழ்நிலை ஏற்படலாம். நிதான செயல் கூடுதல் நன்மை பெற்று தரும். தொழில், வியாபார நடைமுறை சுமாராக இருக்கும். பணச்செலவில் சிக்கனம் நல்லது. தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

தனுசு : பணி முழு அளவில் வெற்றியை தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

மகரம் : செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுயதேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

மீனம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடம் உருவாக்கும். பணிச்சுமை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து உண்ண வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 31/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி, 31.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...