Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/07/2019

இன்றைய நாள் எப்படி 04/07/2019

இன்று!

விகாரி வருடம், ஆனி மாதம் 19ம் தேதி, ஷவ்வால் 30ம் தேதி,
4.7.19 வியாழக்கிழமை வளர்பிறை, துவிதியை திதி இரவு 9:37 வரை,
அதன் பின் திரிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:46 வரை
அதன்பின் பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:38 வரை,அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30-3:00 மணி
எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
குளிகை : காலை 9:00-10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : சந்திர தரிசனம், தட்சணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்தநாள், விவேகானந்தர் நினைவு நாள்.

 

மேஷம் : மற்றவரை விமர்சிக்க சிலர் உங்களை கருவியாக பயன்படுத்துவர். முன்யோசனையுடன் விலகுவது நல்லது.தொழில் வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.

ரிஷபம் : மனதில் இரக்க உணர்வு அதிகரிக்கும். நற்செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள்.தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூலம் உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மிதுனம் : எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் வெளிப்படும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் பன்மடங்கு உயரும். பணக்கடன் பெரும்பகுதி அடைபடும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உருவாக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம் : சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம் : நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

கன்னி : பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உறவினர் வீட்டு விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

விருச்சிகம்: எண்ணம், பேச்சில் கட்டுப்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். திடீர் செலவு ஏற்படலாம். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

தனுசு : எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் முக்கிய செலவால் கரையும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

மகரம் : அதிர்ஷ்டகரமான வாய்ப்பு உங்களை தேடிவரும். மனதில் பலநாள் இருந்த கவலை நீங்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணிகளை மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர்.

கும்பம் : சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். துவங்குகிற பணி முழுஅளவில் வெற்றி பெறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் சந்திக்க நினைத்த நண்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

மீனம் : முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுயதேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட தடையை தாமதமின்றி சரி ய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: