Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/06/2019

இன்றைய நாள் எப்படி 04/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 29ம் தேதி,
4.6.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பிரதமை திதி பகல் 3:10 வரை;
அதன் பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:35 வரை;
அதன் பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த-மரணயோகம்

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00-4:30 மணி
எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
குளிகை : பகல் 12:00-1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
பொது : சந்திர தரிசனம், துர்க்கை வழிபாடு, வாஸ்து நாள். பூஜை நேரம் காலை 9:58-10:34 மணி.

 

மேஷம்: உங்கள் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும்; உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம்: சிறிய செயலும் கடினமாகத் தோன்றலாம்; நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கையைத் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் திடீர் பொருளாதார சிரமங்களை தவிர்க்கலாம். பயன் அறிந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளவும்.

மிதுனம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபார முன்னேற்றத்திற்கு தகுந்த மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் உங்களிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்து சொந்தம் பாராட்டுவர். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்.

கடகம்: செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம்; மனைவியின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

சிம்மம்: நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு, தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற நல்ல யோகம் உண்டு. சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

கன்னி: ஒவ்வொரு செயலிலும் உங்களின் தனித்திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் திடீர் வளர்ச்சி மன மகிழ்வைத்தரும். உபரி பணவருமானம் கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும்.

துலாம்: நிதானித்து செயல்படுவது நல்லது. நண்பர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். சீரான அளவு பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருட்களை விலைக்கு வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.

விருச்சிகம்: நீங்கள் உணர்ச்சி வசப்படும் சூழல் ஏற்படலாம்; குடும்ப விஷயங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கடின உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு உதவும். பணத்தேவையின் அளவு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

தனுசு: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்; உபரி பணவருமானம் கிடைக்கும். விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும்.

மகரம்: உங்களின் தனித்திறமையை நண்பர் பாராட்டுவர். முயற்சிக்கு உரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழித்து மனநிறைவை உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.

கும்பம்: செயல்களில் ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். குடும்பச் செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

மீனம்: சிலர் உங்களுக்கு நெருக்கடி நிலையை உருவாக்குவர். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் நேரம் பணி புரிவீர்கள். சீரான பணவரவு உண்டு. உறவினர் ஆதரவு மனதில் நம்பிக்கை வளர்க்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: