Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/04/2019

இன்றைய நாள் எப்படி 04/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 21ம் தேதி, ரஜப் 27ம் தேதி, 4.4.19, வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மதியம் 1:39 வரை; அதன் பின் அமாவாசை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
* குளிகை : காலை 9:00 – 10:30 மணி
* சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : உத்திரம்
* பொது : அமாவாசை விரதம், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம்: உங்கள் சொந்த நலனில் அக்கறை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேற தாமதமாகலாம். முக்கிய செலவுக்கு சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையை ஓரளவு சமாளிப்பர். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவர்.

ரிஷபம்: பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக் குடன் திகழ்வர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம்: முன்னர் செய்த உதவிக்கு நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் அதிகம் பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

சிம்மம்: உடல்நலனில் கவனம் தேவை. நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட தடைகளை சரி செய்வீர்கள். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: மனதில் தெய்வீக சிந்தனை மேலோங்கும். இயன்ற அளவில் தான தர்மம் செய்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கைத் தரம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும்.

துலாம்: கடந்தகால அனுபவத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி திருப்திகரமாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

விருச்சிகம்: நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீ்ர்கள். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். தொழிற்சாலை பணியாளர்களுக்கு பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு: சுயதம்பட்டத்தால் சிலரது அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் உழைப்பு அவசியம். சுமாரான பணவரவு இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர்.

மகரம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர். ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.

கும்பம்: உறவினர் மத்தியில் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் செழிக்க நிர்வாகச் சீர்திருத்தம் அவசியம். மிதமான லாபம் கிடைக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மீனம்: புத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: