Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/03/2019

இன்றைய நாள் எப்படி 04/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 20ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி, 4.3.19 திங்கட்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மாலை 5:58 வரை; அதன்பின் சதுர்த்தசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:38 வரை; அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
* பொது : முகூர்த்த நாள், மகாசிவராத்திரி, சிவன்வழிபாடு.

மேஷம் : நண்பரின் உதவியால் பலவித நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் தெய்வ வழிபாடு நடத்துவர்.

ரிஷபம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். செலவில் சிக்கனம் நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.

மிதுனம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கடகம் : இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். இயன்ற அளவில் அறப்பணி புரிந்து மகிழ்வீர்கள்.

சிம்மம் : செயல்களில் அன்பு வழியை பின்பற்றுவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டு வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு தேவையான உதவியை வழங்குவீர்கள்.

கன்னி : செயல்களின் விளைவு உணர்ந்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர் வகையில் கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

துலாம் : கஷ்டங்களை நினைத்து மனம் வருந்த நேரலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.

விருச்சிகம் : திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

மகரம் : சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து மனம் மகிழ்வீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்று வீர்கள்.

கும்பம் : செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

மீனம் : நடைமுறை வாழ்வு சுமூகமாக அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: