Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/02/2019

இன்றைய நாள் எப்படி 04/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 21ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 28ம் தேதி,
4.2.19 திங்கட்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 3:01 வரை;
அதன் பின் பிரதமை திதி, திருவோணம் நட்சத்திரம் நாளை அதிகாலை 6:28 வரை;
அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : தை அமாவாசை, முன்னோர் வழிபாடு, அமாசோம பிரதட்சணம், திருவோண விரதம், பெருமாள் வழிபாடு.

மேஷம் : சுறுசுறுப்பான செயலால் பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள்.

ரிஷபம் : பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். உடல்நலத்தில் தகுந்த கவனம் கொள்வது அவசியம்.

மிதுனம் : செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கடகம் : எந்த செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.

சிம்மம் : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கன்னி : செயல்களில் கவனக்குறைவினால் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணவரவில் சுமாரான லாபம் கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

துலாம் : நற்செயலை சிலர் கேலி, கிண்டல் செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக முயற்சி உதவும். செலவில் சிக்கனம் வேண்டும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்தம் தரும்.

விருச்சிகம் : பேச்சு, செயலில் நிதானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

தனுசு : சிலர் குறை சொல்வர். தொழிலில் நிலுவைப் பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு பெறுவதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

மகரம் : நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். புதிய கருத்துக்களை பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். தாராள பணவரவை உரிய சேமிப்பாக மாற்று வீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

கும்பம் : எதிரானவர் சிரமம் உருவாக்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

 

மீனம் : உறவினர் கூடுதல் அன்பு பாசம் கொள்வர். மனதில் நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெற அனுகூலம் உண்டு.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/08/2019

மேஷம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். செயல்களில் சாமர்த்தியமாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானத்தில் ...

%d bloggers like this: