Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/01/2019

இன்றைய நாள் எப்படி 04/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 27ம் தேதி,
4.1.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சதுர்த்தசி திதி அதிகாலை 5:58 வரை;
அதன்பின் அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 2:33 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : மாத சிவராத்திரி, சிவன், மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : சிலர் சொல்லும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். செலவு அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது.

ரிஷபம் : இனிய பேச்சு நண்பரின் மனக்கஷ்டம் தீர உதவும். பெருமித எண்ணங்களுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.

மிதுனம் : நண்பரிடம் ஆன்மிக கருத்துக்களை பேசுவீர்கள். மனதில் பெருமிதமும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

மிதுனம் : நண்பரிடம் ஆன்மிக கருத்துக்களை பேசுவீர்கள். மனதில் பெருமிதமும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

கடகம் : பணிகள் நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறை நண்பரின் உதவியால் சரி செய்வீர்கள். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும்.

கன்னி : இஷ்ட தெய்வ அனுகிரகம் புதிய நன்மைகளை பெற்றுத் தரும். அவமதித்து பேசியவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உருவான தாமதம் விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம்பெறும்.

துலாம் : உதவி பெற்றவர் நன்றி மறந்து உதாசீனமாக செயல்படுவார். குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத சுபநிகழ்வு நடக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : முக்கியமான பணியில் அக்கறை கொள்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள அளவில் பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். முக்கிய செலவுக்காக கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம் : மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். நண்பருக்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பான முறையில் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

மீனம் : மனதில் ஒருமுகத் தன்மையுடன் பணிபுரிவது அவசியம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: