Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 03/12/2018

இன்றைய நாள் எப்படி 03/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 17ம் தேதி, ரபியுல் அவ்வல் 24ம் தேதி,
3.12.18 திங்கட்கிழமை, தேய்பிறை ஏகாதசி திதி மதியம் 2:43 வரை;
அதன்பின் துவாதசி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:30 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00—7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : கார்த்திகை சோமவாரம், சங்காபிேஷகம், ஏகாதசி விரதம், சிவன், பெருமாள் வழிபாடு, கரிநாள்.

மேஷம் : நண்பரிடம் கேட்ட உதவி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவீர்கள்.

ரிஷபம் : எதிர்பாராத வகையில் அவசரப்பணி ஒன்று ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

மிதுனம் : எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.

கடகம் : சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். செயல்களில் உற்சாகம் பரிமளிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நற்செயலால் புகழ் பெறுவர்.

சிம்மம் : சிலர் வீண் பேச்சு பேசுவர். அவர்களால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். அவரிடம் விலகுவதால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள்.

கன்னி : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

துலாம் : செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். பணிகளில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

விருச்சிகம் : நேர்மையுடன் பணிபுரிவீர்கள். நண்பர் உறவினர் தகுந்த ஊக்கம் தருவர். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

தனுசு : அனுபவ அறிவு பரிமளிக்கும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மகரம் : நண்பரிடம் சில விஷயம் பேசுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நிலவுகின்ற அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. பணப்பரிவர்த்தனை சுமாராக இருக்கும். அதிக பயன்தராத பொருள் நிர்ப்பந்தத்தின் பேரில் வாங்க வேண்டாம்.

கும்பம் : மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்.

மீனம் : சந்தோஷ சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள் பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்!

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம். மேஷம் உங்களுடைய சிந்தனையின் போக்கில் மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ...

%d bloggers like this: