Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 03/12/2017

இன்றைய நாள் எப்படி 03/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 17ம் தேதி, ரபியுல்அவ்வல் 13ம் தேதி,
3.12.17 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 10:23 வரை;
அதன் பின் பிரதமை திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 9:55 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
குளிகை : மதியம் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : விசாகம்.
பொது :சூரியன் வழிபாடு. பவுர்ணமி கிரிவலம். கரிநாள்.

மேஷம்: மனசஞ்சலம் நீங்க இஷ்டதெய்வ வழிபாடு செய்யவும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்

ரிஷபம் : மனதில் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுக்கு பணஉதவி செய்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க வழி பிறக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம் : அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணியை உடனே நிறைவேற்றுவது நல்லது. சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பயன் அறிந்து பொருள் வாங்கவும்.

கடகம்: உழைப்புக்குரிய பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். உபரி பணவருமானம் கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும்.

சிம்மம்: செயல் திறன் அதிகரித்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலமுண்டு.

கன்னி: இடையூறு செய்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். கூடுதல் செலவு ஏற்படலாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

துலாம் : எளிதான பணி கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற தாமதம் ஆகலாம். சுயகவுரவம் காக்க செலவு செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : குடும்ப உறுப்பினர்கள் அன்புடன் நடநகது கொள்வர். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். பழைய பாக்கி வசூலாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

தனுசு : நீண்டநாள் லட்சிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரம் செழிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

மகரம் : செயல் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு இருந்தால் தான் லாபம் வரும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் : ஆரவாரம் தவிர்த்தல் அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். பணவரவில் இருந்த மந்த நிலை மாறும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

மீனம் : தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில், வியாபாரம் அறிவு சார்ந்த உழைப்பினால் முன்னேற்றம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றவீர்கள். தர்மப்பணி செய்வீர்கள்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: