Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/11/2019

இன்றைய நாள் எப்படி 03/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, ரபியுல் அவ்வல் 5ம் தேதி,
3.11.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி நாள் முழுவதும்.
உத்திராடம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:46 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : சூரியன் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம்: செயல்களில் நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை தாராள பண செலவில் நிறைவேற்றுவீர்கள். உடல் நலமும், ஆரோக்கிய மன வளமும் ஏற்படும்.

ரிஷபம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறையில் மாற்றம் செய்வது அவசியம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உணவு பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பும், ஆசியும் நிம்மதியை தரும்.

மிதுனம்: எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். உடல் நலத்தில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். அதிக அளவில் பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட கூடாது.

கடகம்: நண்பருடன் முக்கியமான ஆலோசனை நடத்துவீர்கள். திகைப்பு தந்த பணி எளிதில் நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க அனுகூல காரணி பலம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: ஆர்வமுடன் பணி புரிவீர்கள். வியத்தகு அளவில் நன்மை கிடைக்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கை தரம் உயரும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும்.

கன்னி : முக்கியமான செயல் நிறைவேற அவகாசம் தேவைப்படும். தொழிலில் உள்ள அனுகூலத்தை தவறாமல் பாதுகாப்பது நல்லது. சிக்கன பண செலவு சிரமம் அணுகாமல் தவிர்க்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் சஞ்சலம் தீரும்.

துலாம்: சிலரது பேச்சு சங்கடம் தரலாம். நற்பெயருக்கு குறையேதும் வராமல் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். தவிர்க்க இயலாத வகையில் பண செலவு ஏற்படலாம். வெளியூர் பயண திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

விருச்சிகம்: வெகு நாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான உதவி கிடைக்கும். தாராள அளவில் பண வரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

தனுசு: உங்களின் கவன குறைவால் மனதில் பதற்றம் ஏற்படலாம். முக்கியமான செயல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழிலில் உள்ள அனுகூலங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

மகரம் : தாயின் அன்பும், ஆசியும் மனதில் புதிய உத்வேகம் தரும். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். அதிக பண வரவினால் சந்தோஷம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. முக்கியமான பணிகளை நிறைவேற்ற மாற்று உபாயம் பயன் தரும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சிறு அளவில் பண கடன் பெறுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மீனம் : இளமை காலத்தில் சந்தித்த நிகழ்வுகளை எண்ணி மகிழ்வீர்கள். மனதில் புத்துணர்வு பிறக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி பதவி பெறலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: