Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/10/2019

இன்றைய நாள் எப்படி 03/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 16ம் தேதி, ஸபர் 3ம் தேதி,
3.10.19 வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 4:02 வரை;
அதன்பின் சஷ்டிதிதி, அனுஷம் நட்சத்திரம் மாலை 6:17 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.

மேஷம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். மனதை செம்மைப்படுத்தி கொள்வது அவசியம். தொழில், வியாபாரம் அதிகரிக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள்.

ரிஷபம் : மனதில் பல நாள் இருந்த சங்கடம் தீரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம் : உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். எளிமையானவருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கடகம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

சிம்மம் : முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் செலவும் ஏற்படும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் நித்திரை கெடலாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும்.

கன்னி : நண்பரின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

தனுசு: சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர்.

மகரம் : அன்பு வழியை அதிகம் பின்பற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

கும்பம் : எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம்சம் உள்ள பொருள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மீனம் : திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...