Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/07/2019

இன்றைய நாள் எப்படி 03/07/2019

மேஷம் : பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரிடம் பரிசு, பாராட்டு பெறுவர்.

ரிஷபம் : கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விடாமுயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: நண்பரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தொழிலில் நிர்ணயித்த வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம் : சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம் : பேச்சில் வசீகரத் தன்மை வெளிப்படும். புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். உபரி வருமானம் சேமிப்பாகும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.

கன்னி : எதிர்பாரத்த செயலில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் வரும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

துலாம் : எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தியானம் தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம் : வீண்பேச்சை குறைப்பது நல்லது. .தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு : லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும்.தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

மகரம் : திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் சேமிப்பாக மாறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.

கும்பம் : மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள்.

மீனம் : செயல் நிறைவேற விடாமுயற்சி அவசியம்.தொழில் வியாபாரத்தில் தடங்கல் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். முக்கிய தேவைக்கு கொஞ்சம் கடன் வாங்குவீர்கள். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளிப்பர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: