Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/06/2019

இன்றைய நாள் எப்படி 03/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 20ம் தேதி, ரம்ஜான் 28ம் தேதி,
3.6.19, திங்கட்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி மாலை 4:19 வரை;
அதன் பின் பிரதமைதிதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:08 வரை;
அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : பகல் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
பொது : அமாவாசை விரதம், அமாசோம பிரதட்சிணம், முன்னோர், அரசமர வழிபாடு.

 

மேஷம்: உங்களிடம் சிலர் அதிருப்தியுடன் பேசுவர். பொது இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், வளர்ச்சி நிலை சீராகும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்: புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். தொழிலில் தாராள உற்பத்தி, விற்பனை உண்டு. நிலுவைப் பணத்தை வசூலிக்க இதமான அணுகுமுறையை பின்பற்றுவீர்கள். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: மன அமைதியை பாதுகாப்பது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர் உதவுவார். எதிர்பார்த்த வகையில் பணவரவு இருக்கும். தவிர்க்க இயலாதபடி பணச்செலவு ஏற்படலாம்; வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கடகம்: நட்பின் பெருமையை உணருவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்: ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கூட இருந்து குழிப்பறிப்போரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். தொழிலில், வியாபார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பிள்ளைகள் உங்கள் நற்குணத்தை அறிந்து, உங்களிடம் இதமாக நடந்து கொள்வர். மனைவியின் தியாக குணத்தை எண்ணி மனம் நெகிழ்வீர்கள்.

கன்னி: பணிச்சுமை அதிகரிக்கலாம்; குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு கூடுதலாக பணியாற்றுவீர்கள். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுங்கள்.

துலாம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம்; மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். போக்குவரத்தில் கவனம் பின்பற்றவும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

விருச்சிகம் : லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். துவங்கிய பணிகள் இனிதே நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். நண்பர்களுடன் விருந்து, விழாவிpல் கலந்து கொள்வீர்கள். பணவரவுக்கேற்ப வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : உங்களின் தனித்திறமை செயல்களில் பரிமளிக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். அதிக பணவரவினால் மனம் மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம் : சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதால் நன்மை கூடும். பணச்செலவில் சிக்கனம் வேண்டும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும்.

கும்பம் : நண்பரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப் போகலாம். தொழில், வியாபாரம் செழிக்க, சில மாற்றங்களை செய்வது அவசியம். அளவான பணவரவு உண்டு. பயன்தராத பொருளை வாங்க வேண்டாம்.

மீனம் : சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். முக்கியஸ்தர் ஒருவரின் உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான போட்டி குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை தாராள மனதுடன் பூர்த்தி செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: