Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/03/2019

இன்றைய நாள் எப்படி 03/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 19ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,
3.3.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, துவாதசி திதி மதியம் 3:57 வரை;
அதன்பின் திரயோதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 11:09 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம்.\

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : முகூர்த்தநாள், திருவோண விரதம், பிரதோஷம், சூரியன் வழிபாடு.

மேஷம் : நண்பரின் உதவியால் பலவித நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் தெய்வ வழிபாடு நடத்துவர்.

ரிஷபம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். செலவில் சிக்கனம் நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.

மிதுனம் : அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கடகம் : இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். இயன்ற அளவில் அறப்பணி புரிந்து மகிழ்வீர்கள்.

சிம்மம் : சுறுசுறுப்புடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கன்னி : முக்கியமான செயல் நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

துலாம் : கஷ்டங்களை நினைத்து மனம் வருந்த நேரலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக கூடுதல் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.

விருச்சிகம் : திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக தகுந்த பணிபுரிவீர்கள். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும். மாணவர் புதிவர்களிடம் நிதானித்து பழகவும்.

மகரம் : மதிநுட்பம் நல்வாழ்வுக்கு புதிய வழிகாட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சிறப்பாக பணிபுரிவீர்கள். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப்பொருள் பொருள் வாங்குவீர்கள்.

கும்பம் : சிலரது பேச்சு மனதை சங்கடப்படுத்தும். அதிக உழைப்பினால் தொழில் வளர்ச்சி சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம்பெறும்.

மீனம் : நடைமுறை வாழ்வு சுமூகமாக அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: