Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/02/2019

இன்றைய நாள் எப்படி 03/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 20ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 27ம் தேதி,
3.2.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 12:58 வரை;
அதன் பின் அமாவாசை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 3:56 வரை;
அதன் பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்த யோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : மாத சிவராத்திரி, சிவன், சூரியன் வழிபாடு.

மேஷம் : பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தின் முக்கியத் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் : பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சி வேண்டும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு மாற்று உபாயத்தால் சரியாகும். அதிக நிபந்தனைகளுடன் கடன் பெற வேண்டாம். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

மிதுனம் : அனுபவசாலியின் ஆலோசனையால் பணி சிறப்பாக அமையும். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். பொருட்கள் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கடகம் : விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி இலகுவாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம் : உறுதியான மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கன்னி : புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தொந்தரவு ஏற்படலாம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். சமரச பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

துலாம் : நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். செயலில் முன்யோசனை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு மிதமான அளவில் இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : மனதில் புத்துணர்வு பிறக்கும். அறிவுப் பூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : பிறரது ஏளன பேச்சுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலில் இடையூறுகளை சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும். பணவரவு முக்கியத் தேவைகளுக்கு பயன்படும். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

மகரம் : நற்குணம் உள்ளவரின் நட்பு கிடைக்கும். தாமதமான செயல் அனுகூலபலன் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை தெய்வ அருளால் அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம் : உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். உடல் ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம்.

மீனம் : புதிய நண்பரின் அறிமுகமும் ஆலோசனையும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து கூடுதல் நன்மை பெறுவீர்கள். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: