Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/01/2020

இன்றைய நாள் எப்படி 03/01/2020

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 18ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 7ம் தேதி,
3.1.20 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 10:29 வரை,
அதன்பின் நவமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 6:59 வரை,
அதன் பின் ரேவதி நட்சத்திரம்,சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: காலை 10:30-12:00 மணி
எமகண்டம்: பகல் 3:00-4:30 மணி
குளிகை: காலை 7:31-9:00 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
பொது மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம்: மன அமைதியை பாதுகாப்பது அவசியம். தொழில்,வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர் உதவுவார். தவிர்க்க முடியாத பணச்செலவு ஏற்படலாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

ரிஷபம்: செயல்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தேவையை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மிதுனம்: எண்ணமும்,செயலும் வெற்றியை தரும். குடும்பத்தினர் மனதார வாழ்த்துவர். தொழில், வியாபார வளர்ச்சி ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

கடகம்: சிலர் அதிருப்தியுடன் பேசுவர். பொது இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றவும். எதிர்பார்த்த செய்தி வர தாமதமாகலாம். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

சிம்மம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு அதிக உழைப்பு தேவை. போக்குவரத்தில் கவனம் பின்பற்றவும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

கன்னி: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். பணிகள் தாமதமின்றி நிறைவேறும். தொழில்,வியாபார வளர்ச்சியில், முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

துலாம்: சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் போட்டி குறையும். பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: சிலர் தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர். வாழ்வியல் முறையை சரி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நன்மை கூடும். பணச்செலவில் சிக்கனம் தேவை. உடல் நலத்திற்கு சிகிச்சை உதவும்.

தனுசு: நண்பரிடம் பேச நினைத்த விஷயம் மாறலாம். தொழில், வியாபாரம் செழிக்க, மாற்றங்களை பின்பற்றுவது அவசியம். சீரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: தனித்திறமை செயல்களில் வெளிப்படும். தொழில், வியாபார வளர்ச்சியில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவினால், சந்தோஷம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கும்பம்: வாழ்வில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர தகுந்த பணிபுரிவீர்கள். பணவரவு செலவுகளுக்கு பயன்படும். உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.

மீனம்: புதிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை உண்டாகும். நிலுவைப் பணம் வசூலிக்க, இதமான அணுகுமுறை பின்பற்றுவீர்கள். மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கித் தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 14/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி, 14.1.20 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி ...

%d bloggers like this: