Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/01/2019

இன்றைய நாள் எப்படி 03/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 19ம் தேதி, ரபியுல் ஆகிர் 26ம் தேதி,
3.1.19 வியாழக்கிழமை தேய்பிறை, திரயோதசி திதி அதிகாலை 4:58 வரை;
அதன்பின் சதுர்த்தசி திதி, அனுஷம் நட்சத்திரம் மதியம் 1:21 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : சில நிகழ்வு மனதில் பாதிப்பு ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் அவசியம். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம் : மனச்சாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர் முன்பு கேட்ட உதவியை வழங்குவீர்கள்.

மிதுனம் : மனதில் இருந்த தயக்கம் விலகும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

கடகம் : எதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சொத்தின் பேரில் கடன் பெறுபவர் நம்பகமானவரிடம் வாங்குவது நல்லது

சிம்மம் : சிலரது தற்பெருமை பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கும். காலத்தின் அருமை உணர்ந்து பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப் பணம் கூடுதல் முயற்சியால் வரவாகும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கன்னி : நண்பர்கள் வாழ்த்துவர். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவி அதிக பாசத்தில் மகிழ்வர். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

துலாம் : குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயம் பேச வேண்டாம். புதிதாக உருவாகிற பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

விருச்சிகம் : எளிய அணுகுமுறையால் நல்லவர் மனதில் இடம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

தனுசு : வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பால் மட்டுமே பணவரவு சீராகும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

மகரம் : மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற உதவி புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கும்பம் : இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக வந்து சேரும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் : அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கான பணவரவு கிடைக்கும். பிள்ளைகளை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை நல்லது.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 14ம் தேதி, 18.7.19 வியாழக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: