Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/12/2019

இன்றைய நாள் எப்படி 02/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 16ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி,
2.12.19 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 10:45 வரை,
அதன் பின் சப்தமி திதி, திருவோணம் நட்சத்திரம் பகல் 2:00 வரை,
அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : கார்த்திகை சோமவாரம், சஷ்டிவிரதம், முருகன் வழிபாடு, முகூர்த்த நாள்.

 

மேஷம் : மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாப விகிதம் சராசரி அளவில் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.
ரிஷபம் : உறவினரின் செயலை விமர்சிக்க கூடாது. தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணி அதிகரிக்கும். கொஞ்சம் பண கடன் பெறுவீர்கள். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும். இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மையை தரும்.
மிதுனம் : செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அளவான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

கடகம் : இஷ்ட தெய்வ அருளால் முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் : பணி நிறைவேற பெரிதும் ஆர்வம் கொள்வீர்கள். முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் திருப்திகர நிலை உருவாகும். ஆதாய பண வரவு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு.
கன்னி : உங்களை சிலர் ஏளனமாக பேசுவர். பொறுமையால் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவிலான குறுக்கீடு வரலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். ஒவ்வாத அழகு சாதன பொருள் பயன்படுத்த வேண்டாம்.
துலாம்: சிலரது அதிருப்திக்கு உள்ளாக நேரிடலாம். பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பண செலவில் சிக்கனம் நல்லது. வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம்.

விருச்சிகம்: மனதில் புதிய சிந்தனை பிறக்கும். சமயோசிதமாக பணி புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து பண பரிவர்த்தனை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள் நன்கு படிப்பர்.

தனுசு: நண்பர்களின் அதிருப்தியை தவிர்க்கும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். சிறு அளவில் பண கடன் பெறுவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது.
மகரம் : சிந்தனையில் புதிய மாற்றம் ஏற்படும். செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகும். தாராள பண வரவில் சேமிப்பு கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.
கும்பம் : நிகழ்வுகளில் மாறுபட்ட தன்மை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு நற்பலன் தரும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியம் பாதுகாக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.
மீனம் : எவரிடமும் சாந்த குணத்துடன் பழகுவீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பண வரவில் திருப்திகரமான நிலை உண்டு. முக்கிய வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 30/11/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 14ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி, 30.11.19 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி ...

%d bloggers like this: