Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 02/12/2018

இன்றைய நாள் எப்படி 02/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 16ம் தேதி, ரபியுல் அவ்வல் 23ம் தேதி,
2.12.18 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, தசமி திதி மாலை 4:30 வரை;
அதன்பின் ஏகாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:04 வரை;
அதன்பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : முகூர்த்த நாள், சூரிய வழிபாடு

மேஷம் : விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணவரவில் திருப்திகரமான நிலைமை உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : ஆணவம், அகம்பாவத்தை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. உடல ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் : பணிகளை முன் யோசனையுடன் துவங்க வேண்டும். நண்பருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

கடகம் : மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

சிம்மம் : அத்தியாவசியமான பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வாழ்வில் முன்னர் பெற்ற அனுபவம் நற்பயன் தரும். தொழில், வியாபார நடைமுறையில் நிதானம் பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி : புதியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்து மனதில் மகிழ்ச்சி பெறுவீர்கள். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். ஆடம்பரச் செலவை தவிர்த்திடுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

துலாம் : வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். பெருந்தன்மையுடன் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

விருச்சிகம் : செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல சூழ்நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

தனுசு : நல்ல செயல்களை நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். பிள்ளைகள் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.

மகரம் : எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன் யோசனையுடன் பணிபுரிவது அவசியம். எதிர்பார்த்த வகையில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக் கூடாது. மாணவர்கள் படிப்பில் மட்டு கவனம் செலுத்தவும்.

கும்பம் : சிலர் தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர். தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தாயின் அன்பும் கருணையும் நிறைந்த ஆசி மனதிற்கு நம்பிக்கைத் தரும்.

மீனம் : புதிய அணுகுமுறையினால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். நற்பலன் அதிகரித்து எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. உபரி பணவரவில் சேமிப்பு கூடும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: