Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/11/2019

இன்றைய நாள் எப்படி 02/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 16ம் தேதி, ரபியுல் அவ்வல் 4ம் தேதி,
2.11.19 சனிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி நாளை அதிகாலை 5:53 வரை;
அதன்பின் சப்தமி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 3:21 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : கந்த சஷ்டி, சஷ்டி விரதம் முருகன், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: சுற்று சூழல் மாறுபட்டதாக இருக்கும். அக்கம் பக்கத்தவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட செயலை மறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக செயல்படுவர். சக தொழில் சார்ந்தவரிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். பண வரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மிதுனம் : மனதில் இறையருள் மீதான நம்பிக்கை வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறந்து புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

கடகம்: இனிய எண்ணங்களுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் பல காலம் இருந்த இடையூறு விலகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் : சுயமான செயல் மட்டுமே ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

கன்னி : மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இசை பாடலை ரசிப்பதால் மனம் சஞ்சலம் தீரும்.

துலாம்: நண்பரின் ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பலரும் வியக்கும் வகையில் தொழிலில் வளர்ச்சி உருவாகும். உபரி பண வருமானம் மகிழ்ச்சி தரும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: முக்கியமான பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும்.

தனுசு: மனதில் வெகு நாள் இருந்த குழப்பம் சரியாகும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து வளர அதிகம் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரரின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

மகரம் : நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை தரும். தொழிலில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். மனைவி வழி சார்ந்த உறவினரால் நன்மை உண்டு. புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.

கும்பம் : உழைப்பின் மீதான நம்பிக்கை வளரும். நண்பரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பண வரவில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

மீனம் : உங்கள் செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வரவில் நிலுவை பண கடன் செலுத்துவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் ஏற்படலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: