Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/10/2019

இன்றைய நாள் எப்படி 02/10/2019

மேஷம் : நண்பரின் ஆலோசனையால் நன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். குடும்ப செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

ரிஷபம் : உறவினர் அன்பு, பாசத்துடன் பழகுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.

மிதுனம் : மனதில் இருந்த கவலை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி வளரும்.

கடகம்: சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். நிதானித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். குடும்ப செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். செல்ல பிராணிகளிடம் விலகுவது நல்லது.

சிம்மம் : சிலரது பேச்சு மனம் தளர செய்யும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி : பிறருக்கு உதவுகின்ற சிந்தனை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இளமை கால இனிய நினைவு மகிழ்ச்சி தரும்.

துலாம்: பணத்தேவைக்காக உறவினர் உங்களை அணுகுவார். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம்.

விருச்சிகம்: மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். பகைவரால் உருவான நெருக்கடி பலமிழந்து போகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாப விகிதம் திருப்திகரமாகும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.

தனுசு: எவரிடமும் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சாதக சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

மகரம் : நண்பருக்கு முன்னர் செய்த உதவிக்கான நற்பலன் தேடி வரும். புதிய நம்பிக்கையுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கும்பம் : உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். விலகி சென்ற உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு.

மீனம் : உங்கள் செயலில் குளறுபடி ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை சிரமங்களை சரி செய்ய உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற மென்மையான அணுகுமுறை அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். நித்திரை தாமதமாகலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: