Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/09/2019

இன்றைய நாள் எப்படி 02/09/2019

மேஷம் : எதிர்பார்த்த காரியம் வெற்றி செய்தி தரும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் ,வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். சேமிப்பை கொஞ்சம் அதிகரிப்பீர்கள்.

ரிஷபம் : பொறுப்புணர்வுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கிய தேவைகளுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம்.

மிதுனம் : சிறு செயலும் கடினமாக தோன்றலாம். பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம் : நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிம்மம் : வழக்கத்திற்கான மாறான பணி தொந்தரவு தரலாம். குடும்ப உறுப்பினர் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் நகை பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும்.

கன்னி : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தாமதம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

துலாம் : மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். பணச்செலவில் சிக்கனம் வேண்டும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : நண்பரிடம் சொந்த விஷயம் பேசுவீர்கள். தேவையான உதவி கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பணவரவு வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

தனுசு : கடந்த கால உழைப்புக்கு நற்பலன் பெறுவீர்கள். தொழில் ,வியாபாரம் செழித்து நம்பிக்கை ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பொதுநலப் பணி செய்வீர்கள்.

மகரம் : எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம் செய்வதால் மனதில் புத்துணர்வு ஏற்படும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக் கூடாது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : மனதில் சிறு சஞ்சலம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மீனம் : சான்றோர்களின் ஆசி கிடைக்கும். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறை சரி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: