Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/06/2019

இன்றைய நாள் எப்படி 02/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 19ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி,
2.6.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 5:00 வரை;
அதன் பின் அமாவாசை திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 1:19 வரை;
அதன் பின் ரோகிணி நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : பகல் 12:00-1:30 மணி
* குளிகை : பகல் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
பொது : கார்த்திகை விரதம்.முருகன், சூரியன் வழிபாடு.

 

மேஷம்: மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். பணிகளை அதிக பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான மந்தநிலை மாறும். சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.

ரிஷபம்: நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள். நல்ல தீர்வுக்கான ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.

மிதுனம்: வழக்கத்திற்கு மாறான பணிp தொந்தரவு தரலாம். பணி நிறைவேற கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். சிக்கனச்செலவு தேவையற்ற பணக்கடன் பெறுவதை தவிர்க்கும்.

கடகம்: செயல்களில் சமூக பொறுப்புணர்வு கலந்திருக்கும். இதனால் நல்லோர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி, திட்டமிட்டபடி நிறைவேறும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.

சிம்மம்: கடந்த கால உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும். உங்கள் செயல் திறனை பிறர் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து, வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் குடும்பத் தேவை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

கன்னி: மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

துலாம்: சிறு செயலும் கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர் ஆதரவு தருவர். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்: எதிர்பார்த்த காரியம் வெற்றியை தரும். நண்பரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவியின் பாசத்தில் மகிழ்வீர்கள்.

தனுசு: சமூகத்தில் உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரிடம் கேட்ட உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்

மகரம்: உங்களின் கடந்த கால சிரமங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும்.

கும்பம்: மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் அதிகபணம் செலவாகும்.

மீனம்: உங்கள் செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: