Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/03/2019

இன்றைய நாள் எப்படி 02/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 18ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 24ம் தேதி,
2.3.19 சனிக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மதியம் 2:10 வரை;
அதன்பின் துவாதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 8:53 மணி வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : ஏகாதசி விரதம், பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம் : தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு நிறைவேற காலஅவகாசம் தேவைப்படும். உறவினர்களின் உதவி மனதிற்கு ஊக்கம் தரும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

ரிஷபம் : செயல்களில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை பின்பற்றவும். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் கருதி மேற்கொள்ளலாம்.

மிதுனம் : இனிய எண்ணங்கள் மனதில் உற்சாகம் தரும். ஓய்வை தவிர்த்து ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதில் பூர்த்தியாகும். ஆதாய பணவரவில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

கடகம் : நலம் விரும்பிகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

சிம்மம் : புதியவர்களிடம் பழகுவதில் நிதானம் வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப்பெறுவர்.

கன்னி : உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும்.

துலாம் : உத்வேக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணவரவில் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். சத்து நிறைந்த உணவு உண்டு மகிழ்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

விருச்சிகம்: எவரிடமும் அளவுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு குறுக்கீடு வந்து சரியாகும். அளவான பணவரவு கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பும் ஆசியும் பெறுவீர்கள்.

தனுசு : பொதுநலப் பணியில் ஈடுபாடு வளரும். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவினால் வளர்ச்சி திருப்திகரமாகும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வும் மகிழ்ச்சிகரமான சூழலும் ஏற்படும்.

மகரம் : பொது விஷயம் நண்பரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையால் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.

கும்பம் : எளிய நடைமுறைகளை பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மீனம் : முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய திட்டங்களுடன் அதிக பணிபுரிவீர்கள். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி கிடைக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: