Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/02/2019

இன்றைய நாள் எப்படி 02/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 19ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 26ம் தேதி,
2.2.19 சனிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 11:08 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 1:36 மணி வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : சனி மகாபிரதோஷம், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம் : சொந்த பிரச்னைகளை பிறரிடம் சொல்லக்கூடாது. அன்றாட பணி ஓரளவு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருகிற குறுக்கீடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை உண்டு. தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் மனம் அமைதி பெறும்.

ரிஷபம் : செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூல பலன்களை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

மிதுனம் : வெகுநாள் லட்சியக் கனவு இனிதாக நிறைவேறும். சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம் : பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில், பணவரவு பெறுவீர்கள். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : சிலர் குறை சொல்லி பேசுவர். தொழிலில், சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கன செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்க உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

கன்னி : கடந்தகால அனுபவங்களை எண்ணி, தைரியத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : செயல்களில் புதிய உற்சாகம் ஏற்படும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: செயல்கள் தாமதம் ஆவதால், மனம் வருந்த நேரிடலாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

தனுசு: புதியவர்கள், அன்பு பாராட்டுகிற அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கூடுதல் கவுரவமும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மகரம் : எவரிடமும் வெளிப்படையான குணத்துடன் பழகுவீர்கள். நற்செயல்களை சிலர் கேலி, கிண்டல் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

கும்பம் : சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி, திட்டமிட்டபடி நிறைவேறும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மாணவர்கள் நன்றாக படித்து சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.

மீனம் : பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மனதில் பெருமிதம் கொள்வீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: