Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/01/2019

இன்றைய நாள் எப்படி 02/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 18ம் தேதி, ரபியுல் ஆகிர் 25ம் தேதி,
2.1.19 புதன்கிழமை தேய்பிறை, துவாதசி திதி அதிகாலை 4:29 வரை;
அதன்பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் 12:36 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம், ஏகாதசி விரதம், விஷ்ணு வழிபாடு.

 

மேஷம் : கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம். நண்பரின் ஆலோனை நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவு இருக்கும். குடும்பச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

ரிஷபம் : சிறு விஷயத்திலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

மிதுனம் : இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு முன்னேற்றம் பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கடகம் : மற்றவர்கள் வாங்கும் பொருளுக்கு பேரம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும்.

சிம்மம் : செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

கன்னி : நண்பரின் உதவியால் செயல்களில் உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

துலாம் : எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர் அதிக வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வர். அதிகம் பயன்தராத பொருட்கள் விலைக்கு வாங்க வேண்டாம்.

விருச்சிகம் : இனிய நினைவுகள் மனதில் உற்சாகம் தரும். நண்பர்களிடம் நன்மதிப்பு உயரும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். உபரி பணவரவில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு : சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால் அனுகூலம் உண்டாகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : செயல்களில் சுதந்திர மனப்பாங்கு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். தகுந்த உழைப்பால் அதிக பணவரவு பெறுவீர்கள். குடும்ப பிரச்சினையில் சுமூக தீர்வு கிடைக்கும்.

கும்பம் : பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இடையூறு விலகி பதவி பெற அனுகூலம் உண்டு.

மீனம் : குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அவசியம். குடும்பச்செலவு அதிகரிக்கும். தொழிலில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்று சரிசெய்ய வேண்டும். அதிகம் பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: