Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்றைய நாள் எப்படி 01/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி,
1.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 9:20 வரை,
அதன் பின் சஷ்டி திதி, உத்திராடம் நட்சத்திரம் பகல் 12:13 வரை,
அதன் பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : சூரியன் வழிபாடு, முகூர்த்த நாள்

மேஷம் : நண்பரின் அன்பை உணருவீர்கள். எதிர் கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தாராள பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.
ரிஷபம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடம் உருவாக்கும். மனசாட்சியுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிகம் பணி புரிவது அவசியமாகும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும்.

மிதுனம் : பொது இடங்களில் நிதானித்து பேச வேண்டும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி சுமை உருவாகும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம் : செயல்களில் நியாயம், தர்மம் அதிக அளவில் பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பண வரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
சிம்மம் : உங்கள் உழைப்பின் அருமையை நண்பர், உறவினர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்வீர்கள்.
கன்னி : நற்பெயரை பாதுகாத்து கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் பணி புரிவீர்கள். புதிய இனங்களில் பண செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
துலாம் : குணம் கெட்ட ஒருவருக்கு உதவுகின்ற மாறுபட்ட சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும். பண வரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். சுற்றுப்புற சூழ்நிலையின் தொந்தரவினால், நித்திரை கெடலாம்.
விருச்சிகம் : வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பண வரவு கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
தனுசு : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரம் செழிக்க நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பண வரவு உண்டு. அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
மகரம் : தொல்லை கொடுத்தவர் இடம் மாறி போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர் கால தேவைக்கு கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி பெற அனுகூலம் வளரும்.
கும்பம் : சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூல தனம் போதும். கூடுதல் உழைப்பால் பண வரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மீனம் : உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 30/11/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 14ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி, 30.11.19 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி ...

%d bloggers like this: