Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 01/12/2017

இன்றைய நாள் எப்படி 01/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 15ம் திகதி, ரபியுல் அவ்வல் 11ம் திகதி,
1.12.17 வெள்ளிக்கிழமை, வளர்பிறை திரயோசிதசி திதி இரவு 2:31 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, அசுவினி நட்சத்திரம் மதியம் 12:23 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30 -12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி
* குளிகை : காலை 7:30 – 9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை.
பொது : மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்:
பொது விஷயத்தில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடைந்து லாபம் கிடைக்கும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் :
உறவினர் சார்ந்த திட்டம் மாறிப்போகலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை உடனே சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீடு, வாகன, ஆபரண பாதுகாப்பில் கவனமாக இருக்கவும்.

மிதுனம் :
இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று நடைமுறைகளைப் பின்பற்றுவீர்கள். உபரி பணவரவால் சேமிப்பு அதிகரி்க்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் உண்டு.

கடகம் :
அறிவுத்திறனுடன் பேசி பலரின் பாராட்டை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை சரியாகி விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

சிம்மம் :
உங்கள் பேச்சில் விரக்தி வெளிப்படலாம். சுயகவுரவம் காப்பதில் கவனம் செலுத்துவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி :
திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் உழைப்பு தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். செலவில் சிக்கனம் தேவை. இஷ்ட தெய்வ வழிபாடு செய்து புத்துணர்வு பெறுவீர்கள்.

துலாம் :
நண்பர், உறவினர் அன்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிப்படையும். தாராள பணவரவு கிடைத்து சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத் தேவையை பூர்த்தி செய்வீ்ர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம் :
வெகுநாள் ஆசை இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து வளர அனுகூலம் உண்டாகும். பணவரவு முன்னேற்றம் பெறும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு தாய்வழி உறவினரால் நன்மை உண்டாகும்.

தனுசு :
பொது விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். அளவான லாபம் கிடைக்கும். சேமிப்பு பணம் தக்க சமயத்தில் பயன்படும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது.

மகரம் :
பிறருடயை விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். சுமாரான பணவரவு இருக்கும். தேவை அறிந்து செலவு செய்யவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

கும்பம் :
எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்ட இலக்கை எட்டும். கூடுதல் பணவரவால் தான தர்ம பணி செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

மீனம் :
நிதானமாக செயல்பட்டால் உரிய பலன் பெறலாம். தொழில், வியாபாரம் செழிக்க நண்பர் உதவுவர். அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். பெண்கள் வீடு, ஆபரணத்தில் கவனமுடன் இருக்கவும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: