Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 01/11/2019

இன்றைய நாள் எப்படி 01/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 15ம் தேதி, ரபியுல் அவ்வல் 3ம் தேதி,
1.11.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி நாளை அதிகாலை 5:01 வரை;
அதன் பின் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 2:23 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : மகாலட்சுமி வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம்: நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தாமதமாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்பத்திற்கான பண செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்க உதவும்.

ரிஷபம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகசித்து பேசுவர். மனம் தளராமல் சுய கவுரவம் பாதுகாத்து கொள்வீர்கள். அதிக உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

மிதுனம்: புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிகழ்வுகள் இனிதாக அமைந்து அனுகூல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: சங்கடங்கள் விலகி மனதில் தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகர வளர்ச்சி உண்டாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். புத்திரரின் நற்செயல் பெருமையை தேடி தரும்.

சிம்மம்: முக்கியமான எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். நண்பரின் உதவியால் சில நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கன்னி: இடையூறுகளை எண்ணி மனம் கலங்க வேண்டாம். சமயோசிதமாக செயல்படுவதால் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணி புரிவது அவசியம். பண வரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும்.

துலாம்: நண்பரின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் செயலில் கவன சிதறல் ஏற்படலாம். பணிகளில் தகுந்த திட்டமிடுதல் அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க வேண்டாம்.

தனுசு: தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பணிகளில் நேர்த்தி உருவாகும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மகரம் : சொந்த பணியில் ஈடுபடுவதால் மனதில் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாப விகிதம் சராசரி அளவில் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கும்பம்: பணிகளை நேர்த்தியுடன் விமரிசையாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். உடன் பிறந்தவருக்கு உதவுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: சமூக பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். முக்கிய செயல் தெய்வ அனுகூலத்தால் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: