Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 01/11/2018

இன்றைய நாள் எப்படி 01/11/2018

இன்று

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 15ம்தேதி, ஸபர் 22ம் தேதி,
1.11.18 வியாழக்கிழமை தேய்பிறை, அஷ்டமி திதி காலை 8:52 வரை;
அதன்பின் நவமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:10 வரை;
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 10:30—12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : தட்சணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்: பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவை. ஆதாயம் சுமாராக இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பணியில் திறமையை வளர்த்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

மிதுனம்: எதிர்பாராமல் சிரமம் குறுக்கிடலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற விடாமுயற்சி தேவை. லாபம் சுமார். பெண்கள் பிறர் பார்வையில் செலவு செய்ய வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலனுக்கு அவசியம்.

கடகம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

சிம்மம்: இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆலோனை நல்ல மாற்றம் தரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். சீரான லாபம் கிடைக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

கன்னி: முக்கியப்பணி நிறைவேற உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

துலாம்: உறவினர் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி வரும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

விருச்சிகம்: அக்கம்பக்கத்தினரால் சிரமம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத் தன்மை பாதுகாப்பது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

தனுசு: குடும்ப பிரச்னையை பிறரிடம் பேச வேண்டாம். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றுவதால் லாபம் சீராகும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

மகரம்: நண்பரின் குறையை சரிசெய்வீர்கள். உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும்.தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் குடும்பவளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.

கும்பம்: குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதலால் முன்னேறுவீ்ர்கள். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: மனதில் குழப்பம் உருவாகலாம். தகுதி மீறிய செயல் எதிலும் ஈடுபட வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் நிதானமாக பேசவும்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: