Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 01/06/2019

இன்றைய நாள் எப்படி 01/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 26ம் தேதி,
1.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மாலை 5:14 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, பரணி நட்சத்திரம் இரவு 12:55 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30-3:00 மணி
குளிகை : காலை 6:00-7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
பொது : மாத சிவராத்திரி சிவன்,சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: மனதில் உற்சாகம் ஏற்படும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வெற்றி போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தும். புதிய வழிகளில் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம்: உங்களின் நல்ல செயல்களை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். பயன்தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

மிதுனம் : நற்செயல்களால் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: செயல்களில் சமூக பொறுப்புணர்வு கலந்திருக்கும். இதனால் நல்லோர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி, திட்டமிட்டபடி நிறைவேறும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.

சிம்மம்: சில நிகழ்வுகள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தலாம். கடந்தகால அனுபவங்களை எண்ணி, தைரியத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். எதிர்பார்த்த பணவரவில் தாமதம் ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி : உங்களின் நற்செயல்களால் பலன் ஏற்படம். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

துலாம்: உங்களின் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் நேர்மை நிறைந்திருக்கும். புதியவர்கள் நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு. இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள்.

தனுசு: உங்களின் மனக்குழப்பத்திற்கு குடும்ப உறுப்பினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் அனுகூல பலன்களை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மகரம்: ஊக்கமுடன் செயல்படுவதால் அன்றாட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் குறுக்கீடுகளை சரிசெய்வீர்கள். சிறிதளவு பணக்கடன் பெறும் சூழல் ஏற்படம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

கும்பம்: புதியவரும் உங்கள் மீது அன்பு பாராட்டுவர். செயல்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கூடுதல் கவுரவமும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

மீனம்: செயல்களில் தாமதம் ஏற்படுவதால் மனம் வருந்த நேரிடலாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற உதவும். உறவினர் வகையில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சி மேற்கொள்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/09/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 3ம் தேதி, மொகரம் 20ம் தேதி, 20.9.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: