Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 01/01/2019

இன்றைய நாள் எப்படி 01/01/2019

இன்று!

விளம்பி வருடம், மார்கழி மாதம் 17ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி,
1.1.19 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி அதிகாலை 4:30 வரை;
அதன்பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 12:24 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00- 10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : ஆங்கிலப்புத்தாண்டு, முருகன், துர்க்கை வழிபாடு.

மேஷம் : மனதில் பிறர் நலன் பற்றிய அக்கறை வளரும். உறவினர் புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர். தொழிலில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறைந்து பதவி பெற வாய்ப்பு வரும்.

ரிஷபம் : சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

மிதுனம் : வாழ்வின் நன்மை மற்றும் சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றவும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

கடகம் : பணிகளில் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம்பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம். நித்திரையில் இனிய கனவு வரும்.

சிம்மம் : பரிகாசத்துடன் பேசுபவரிடம் விலகி சுயகவுரவம் பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும்.

கன்னி : பணித் திறமையை வளர்த்து கொள்வீர்கள். முக்கியமான செயலில் அதிக நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

துலாம் : சூழ்நிலையின் தாக்கம் மனதில் குழப்பம் உருவாக்கலாம். நண்பர் சிறு அளவில் உதவுவார். அதிக உழைப்பினால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். ஆடம்பர செலவை தவிர்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

விருச்சிகம் : குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதல் படி செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

தனுசு : முக்கியப் பணி நிறைவேற அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மகரம் : எதிர்பாராத வகையில் சிரமம் வரலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிகம் செலவு செய்வதை தவிர்க்கவும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் : மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோனை நல்ல மாற்றம் உருவாக உதவும். தொழில் வளர்ச்சி பெற அதிக நேரம் பணிபுரிவீர்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

மீனம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமான அளவில் வந்து சேரும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 14ம் தேதி, 18.7.19 வியாழக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: