Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள்எ ப்படி23/11/2017

இன்றைய நாள்எ ப்படி23/11/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 7ம் திகதி, ரபியுல் அவ்வல் 3ம் திகதி, 23.11.2017 வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 3:14 வரை; அதன் பின் சஷ்டி திதி, உத்திராடம் நட்சத்திரம் நாள் முழுவதும். சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 -12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
* குளிகை : காலை 9:00 – 10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, சுபமுகூர்த்தநாள்.

மேஷம்:
நேர்மை, நியாயத்தை பின்பற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவை தாராள செலவில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

ரிஷபம்:
பணியில் அதிக கவனம் தேவை. எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதமாகலாம். தொழில், வியாபார ரகசியங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பயன்படும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும்.

மிதுனம்:
பிறரது செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபார பிரச்னை குறுக்கிட்டாலும், பணவரவு சீராக கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெற்றோரி்ன் அன்பும் ஆசியும் கிடைக்கும். பிள்ளகைளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கடகம்:
வெகுநாள் திட்டம் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். தாராள பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்:
பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வியத்தகு அளவில் வாழ்வில் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும்.

கன்னி:
பொது விஷயம் குறித்து விவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

துலாம்:
பகைவரிடம் விலகி இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்கும் நிலை உருவாகலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்:
தாயின் அன்பு, ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

தனுசு:
நினைத்த செயல் தாமதமாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மகரம்:
நண்பருடன் முக்கியமான ஆலோசனை செய்வீர்கள். தாமதித்த பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். நிலுவை பணம் வசூலாகும். பெண்கள் உறவினர் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

கும்பம்:
சமூக மதிப்பை காப்பதில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். உறவினர் வகையில் தவிர்க்க இயலாத செலவு ஏற்படலாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் ஏற்படலாம்.

மீனம்: 
மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: