Home / உள்நாட்டு செய்திகள் / இன்று முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம்!!

இன்று முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் மாற்றம்!!

வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் இன்று (01) முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் நலன்கருதி நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கொழும்பு கோட்டை வரை காலை மற்றும் இரவு வேளைகளில் பயணிக்கும் ரயில், இன்று முதல் கோட்டையிலிருந்து தலைமன்னார் – யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக கோட்டை வரை பயணிக்கும் ரயில்களில், அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி வரையான பகுதிகளில் பயணிகள் குறைவாக பயணிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கோட்டை முதல் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயிலில் அதிக பயணிகள் பயணிக்கின்றமையும் ஆய்வில் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...