Home / உள்நாட்டு செய்திகள் / இன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!

இன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடியது.

தேசப்பற்று மற்றும் ஆபத்துகளுக்கு எதிராக நாட்டை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுதல் எனும் எண்ணக்கருவின் கீழ் இக்கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. கொழும்பு 07, புள்ளர்ஸ் ஒழுங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாகிஸ்தானின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் ஜன்பஸ் கான் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்தார்.

இதன்போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுஸைனின் செய்தியை பிரதி உயர்ஸ்தானிகர் வாசித்தார். எங்கள் முன்னோர்கள் ஒரு தனிப்பட்ட போராட்டத்தை நடத்தி, பாகிஸ்தானை அடைய பல தியாகங்களை மேற்கொண்டனர். அவர்களின் கனவுகளின்படி பாகிஸ்தானை கட்டியெழுப்பி நிர்வகிப்பதற்கான பொறுப்பு எம்மிடமே காணப்படுகின்றது. இந்த இலக்கை அடைவதற்கு சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்குமிடையே நல்லுறவு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை பேணப்பட வேண்டும்.

நாம் நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, ஒரே எண்ணத்துடன் செயற்படும்போதே, இந்நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தை அடைய முடியும்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நசீர் உல் முல்க் விடுத்துள்ள செய்தியில், “சந்தேகத்திற்கு இடமின்றி, நமது அழகிய நாடு, இயற்கை வளங்களால் நிறைந்துள்ளன. புவிசார் மூலோபாய இடம், மிகவும் திறமையான மற்றும் முற்போக்கான இளைஞர்கள் ஆகிய பல்வேறு அரிய விடயங்களை கொண்டுள்ளதன் மூலம், நாம் நமது சொந்த அடைவுகளை பெற்றுக்கொள்ளவும், உலகின் வெற்றிகரமான தேசமாக உயர்வதற்கும் எம்மால் முடியும்” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கை இடையேயான உறவு தொடர்பில் பிரதி உயர்ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கையில், 1948 ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்தே, பாகிஸ்தான் தனது இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உறவு பரஸ்பர புரிதல் மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டவையாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான அதன் தேடலில் பாக்கிஸ்தான் எப்போதும் ஆதரவளிக்கும் என, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் மக்களின் சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் பாகிஸ்தானின் சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில், இலங்கை – பாகிஸ்தான் நட்புறவுச் சங்கம், இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக சபை மற்றும் இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About இனியவன்

x

Check Also

சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா!

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் ...

%d bloggers like this: