Home / உள்நாட்டு செய்திகள் / இன்று இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இன்று இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (01) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது செயற்குழு கூட்டம் இதுவாகும்.

தற்போதைய அரசியல்நிலை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர கட்சியில் புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...

%d bloggers like this: