Home / உள்நாட்டு செய்திகள் / இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ ,தென் , ஊவா , வடமேல் , வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் பலத்த மின்னல் மற்றும் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.

மழை பெய்யும் போது சில பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: