Home / உள்நாட்டு செய்திகள் / இன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இன்று இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கறிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1474 பில்லியன் ரூபாவாகும்.

வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதற்கமைவாகவே இன்று இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 4 மாதங்களுக்கான கடன் எல்லையாக 721 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |நேற்றைய தினம் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 ...

%d bloggers like this: