Home / உள்நாட்டு செய்திகள் / இன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை!!

இன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை!!

‘Batticaloa Campus’ நிறுவனம் தொடர்பில் உயர்கல்வி தொடர்பிலான மேற்பார்வை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (25ஆம் திகதி) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, Batticaloa Campus நிறுவனம் தொடர்பில் உயர்கல்வி தொடர்பிலான மேற்பார்வை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: