Home / உள்நாட்டு செய்திகள் / இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி!!

இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி!!

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக வானூர்தியில் ஜனாதிபதி நாடு திரும்பினார் என கொழும்பு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் , ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  சீன பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பயங்கரவாத சவால்களை வெற்றி கொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்குதல் மற்றும் காவல்துறை திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல் முதலான செயற்பாடுகளுக்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: