Home / உள்நாட்டு செய்திகள் / இனப்படுகொலைக்கு சட்ட நடவடிக்கை தேவை விக்னேஸ்வரன்!

இனப்படுகொலைக்கு சட்ட நடவடிக்கை தேவை விக்னேஸ்வரன்!

2009 இல் நடைபெற்றது இனப்படுகொலை என வடமாகாண சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம் தான். இது சட்டரீதியாக கொண்டு வரவில்லை இது தான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டு வந்தேன் சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன் விரும்பிகள், அமைப்புக்கள் தான் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 130 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் 2009 இல் நடைபெற்றது இனப்படுகொலை என தெரிவித்து வடமாகாண சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் செய்யவேண்டியதைதான் நான் வட மாகாணசபையில் செய்யவேண்டியதாக இருந்துள்ளது. இதனை நாங்கள் எல்லோரும் ஒருமித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.

மேலும் என்னைப்பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம்தான். இது சட்டரீதியானதாக கொண்டுவரவில்லை. இதுதான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டுவந்தேன் சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன் விரும்பிகள், அமைப்புக்கள்தான் அவர்கள் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: