Home / உள்நாட்டு செய்திகள் / இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (08) நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய அமர்வில், ஐக்கிய தேசிய கட்சியினால் ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் பொது மக்களுக்கான பார்வையாளர் கெலரி திறக்கப்படும் என பாராளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்தோடு பாடசாலை மாணவர்கள், வௌிநாட்டு தூதுவர்கள், விசேட அதிதிகளுக்கான கெலரி திறக்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையுடன், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற கெலரி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

அறு­வ­டை­ செய்­த நெல்­ம­ணி­களை வீதி­க­ளில் காய­வி­டும் விவ­சா­யி­க­ள்!!

வியர்வை சிந்திப், பாடு­பட்டு அறு­வ­டை­செய்­யும் நெல்­ம­ணி­களை வீதி­க­ளில் காய­வி­டும் அவ­லத்தை மன்­னார் மாவட்ட விவ­சா­யி­க­ளும் எதிர்­கொண்டுள்ளனர். நெல் காய­வி­டும் தளங்­கள் ...

%d bloggers like this: