Home / ஆன்மீகம் / இந்த குருப்பெயர்ச்சி…. திருமண யோகம் யாருக்கு?

இந்த குருப்பெயர்ச்சி…. திருமண யோகம் யாருக்கு?

இந்த குருப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கு குருபலம் இருக்கிறது என்று பார்ப்போம்!

மேஷம் :

உங்களுக்கு குரு தற்போது 8-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 7வது மற்றும் 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் இதுவரை கல்யாணம் ஆகாதவர்களுக்கும் மற்றும் தடைபட்டு கொண்டு இருந்தவர்களுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெறும்.

ரிஷபம் :

உங்களுக்கு குரு தற்போது 7-ம் இடத்திற்கு வருவதால் குருபலம் இல்லை. திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம் :

உங்களுக்கு குரு தற்போது 6-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 7வது மற்றும் 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் திருமண தடைகள் விலகி திருமண வைபவம் நிகழும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம் :

உங்களுக்கு குரு தற்போது 5-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 5வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் பெரியவர்களின் ஆதரவால் திருமணம் நடைபெறலாம்.

சிம்மம் :

உங்களுக்கு குரு தற்போது 4-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் சிறிது அலைச்சல்களுடன் திருமணம் நடைபெறலாம்.

கன்னி :

உங்களுக்கு குரு தற்போது 3-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 5வது மற்றும் 7வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் திருமண சுபகாரியங்களுக்கு உதவி ஏற்படுத்துவதால் இனி திருமணம் கைகூடி வரும்.

துலாம் :

உங்களுக்கு குரு தற்போது 2-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை காணாததால் குருபலம் இல்லை.

விருச்சகம் :

உங்களுக்கு குரு தற்போது 1-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 7வது மற்றும் 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் ஜாதக பலமும்இ ஒத்துழைப்பும் கூடி உங்களுக்கு திருமணம் கைகூடும்.

தனுசு :

உங்களுக்கு குரு தற்போது 12-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும்.

மகரம் :

உங்களுக்கு குரு தற்போது 11-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 7வது மற்றும் 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிட்டு சுபபலத்தினை ஏற்படுத்துவதால் இனி திருமணம் கைகூடி வரும்.

கும்பம் :

உங்களுக்கு குரு தற்போது 10-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 5வது மற்றும் 7வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் உங்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் துணையைக் கூடிய சீக்கிரம் கொண்டு வந்து சேர்க்கும்.

மீனம் :

உங்களுக்கு குரு தற்போது 9-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும்.

About இனியவன்

x

Check Also

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

இன்று (17-ந்தேதி) கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை ...

%d bloggers like this: