Home / உலகச் செய்திகள் / இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்

ஜாவா:

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து மூன்று சர்ச்சுகளில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளது சுராபாயா நகரம். இங்கு சர்ச்சுகள் உள்ளன. இன்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர் . 13 பேர் காயமடைந்தனர். இன்று ஞாயிறு என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக அராப் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்த அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது என்பது குறித்த தகவல் இல்லை.

About இனியவன்

x

Check Also

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் – 93 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் மோசூல் நகரம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் நாட்டின் ...

%d bloggers like this: